9176 80 80 90

TNPSC Group 1

TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு; தமிழ்நாடு அரசில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி வேலை; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

*TNPSC Group 1 Exam 2022 vacancies, qualification, selection process: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

துணை ஆட்சியர் (Deputy Collector) – 18

துணை காவல் கண்காணிப்பாளர்(DSP) – 26

உதவி ஆணையர், வணிக வரித்துறை (Assistant Commissioner (Commercial Taxes)) – 25

துணைப் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் (Deputy Registrar of Cooperative Societies) – 13

உதவி இயக்குனர், ஊரக வளர்ச்சி துறை (Assistant Director of Rural Development) – 7

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer) – 3

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வணிகவியல், பொருளாதாரம், சமூகவியல் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு சில பதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 21 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவினர் 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.56,100 – 2,05,700

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதில் 175 வினாக்கள் பொது அறிவு பகுதிகளில் இருந்தும், 25 வினாக்கள் கணிதப் பகுதியிலிருந்தும் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் : 30.10.2022

முதன்மைத் தேர்வு நான்கு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்த தேர்வில் 40 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

அடுத்த மூன்று தாள்களும், பொது அறிவு பகுதியை சார்ந்தவை. ஓவ்வொரு தாளும் தலா 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். கேட்கப்படும். இதற்கான கால அளவு தலா 3 மணி நேரம். முதன்மைத் தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவர். நேர்முகத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : முதல்நிலைத் தேர்வு ரூ.100, முதன்மைத் தேர்வு ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

  விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.08.2022

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *